அமரர் ஆனந்தன் காசிப்பிள்ளை

Admin
0





புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Homburg, Germany


யாழ். புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg-ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தன் காசிப்பிள்ளை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

தந்தையே எங்கள் ஆருயிர் அப்பாவே

விண்ணையே நோக்கி நீங்கள் விரைந்திட்டதால்

விழிகள் நித்தம் கண்ணீரால் நிறைகிறது

கண்ணின் மணிபோல் எம்மை காத்து நின்றாயப்பா!

இருளினுள் மறையும் நிழலும்

ஒளிவர உயிர்த்துக்கொள்ளும்

மறைந்து நான்கு வருடம் போயும்

மறுபடி வராததேனோ?

உங்கள் உறவுகள் நாம் இங்கு

கதி கலங்கி நிற்போம் என்று

ஒரு கணம் நினைத்துப் பார்க்க

உங்களுக்குக்கு மனம் வரவில்லையோ?

காலன் அவன் ஆசை கொண்டு

கவர்ந்து சென்றானோ உங்கள் உயிர்தனை

காலம் காலமாய் உங்கள் நினைவால்

காத்து நிற்கின்றோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய

இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top